வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 ஜூன், 2010

தேசிய வடிவமைப்புச் சபையின் செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல்.

 பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய வடிவமைப்புச் சபையின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலப் பணிகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் கொழும்பு மருதானை வீதியில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
1983ஆம் வருடம் இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில்களுக்கு கலைவடிவம் கொடுத்து புதிய புதிய வடிவமைப்புக்களை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சபையானது இலங்கையின் பல பாகங்களிலும் பல்துறை சார்ந்த வடிவமைப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் இச்சபையின் மூலம் பயனாளிகளுக்கான பயிற்சி நெறிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறான சபைகளின் செயற்பாடுகள் உரிய முறையில் கைத்தொழிலாளர்களையும் சென்றடையும் வகையில் பணிகள் விஸ்தரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
இதற்கென விற்பனை நிலையமொன்றிற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ள அமைச்சர் அவர்கள் உரிய வௌ;வேறு நிறுவனங்களுடன் தேசிய வடிவமைப்புச் சபையின் செயற்பாடுகளையும் இணைத்து முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் படியும் உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை வழங்கினார்.
மேற்படி சபையின் கடந்தகாலச் செயற்பாடுகள் இன்று புள்ளி விபரங்களுடன் விளங்கப்படுத்தப்பட்டதுடன் எதிர்காலப்பணிகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் விவரிக்கப்பட்ட விடயங்களையும் அவதானத்தில் எடுத்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தான் தெரிவிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் வீரக்குமார திசாநாயக்கா அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் தேசிய வடிவமைப்புச் சபையின் தலைவர் உட்பட அதிகாரிகளும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’