வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 ஜூன், 2010

ஏற்றுமதித்துறைக்கு அதிகாரசபையின் பங்களிப்பு அவசியம் தேவை : றிஷாத் பதியுதீன்

இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு, ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்பு இன்றியமையாதது எனத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் றிஷாத் பதியுதீன் 2020இல் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 20 பில்லியன் டொலராக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை ஏற்றுமதி அதிகார சபையின் தலைவர் உட்பட பணிப்பாளர் சபையின் புதிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று அமைச்சில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த வருடம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 7 பில்லியன் டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை. இருந்த போதும் அதனை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் குறித்து புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் கவனம் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"தற்போதைய கைத்தொழிற்துறையின் மாற்றம் குறித்து உரிய தரப்புக்களுடன் சரியான தொடர்பை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும். அதேவேளை, சகல இலக்குகளும், திட்டங்களும் உரிய கைத்தொழிற்துறையுடன் தொடர்புபட்ட துறைசார்ந்தவர்களுடன் அமைத்துக் கொள்ளப்படவும் வேண்டும்.
இதன் மூலம், அமைச்சும், கைத்தொழில்துறை சார்ந்தவர்களும் மிகவும் நெருக்கமும், இருக்கமும் கொண்ட தொடர்பை ஏற்படுத்த முடியும்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதித்துறை மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி அவசியம் தேவை. எனவே ஏற்றுமதித்துறையை மேலும் அதிகரிக்கச் செய்வது குறித்த திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களையும் ஏற்றுமதித்துறையின் பங்காளிகளாக உள்ளீர்ப்பது மிகவும் முக்கியமானது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க ஏற்றுமதி அதிகார சபை தலைமை தாங்குவது வரவேற்கத்தக்கது" என்றார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’