வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 ஜூன், 2010

இராணுவத்தில் இணைய - விலக வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீடிப்பு

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் மீண்டும் இராணுவத்தில் இணைந்து கொள்ளவோ அல்லது நிரந்தரமாக விலகிச் செல்லவோ வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இக்கால அவகாசம் எதிர்வரும் 30ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் மீண்டும் இணைந்து கொள்ள அல்லது விலகிச் செல்ல கடந்த மாதம் 30ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தக் கால அவகாசத்தில் 13 ஆயிரம் பேர் சட்ட ரீதியாக இராணுவத்திலிருந்து நிரந்தரமாக விலகிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 30ஆம் திகதிவரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’