வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 ஜூன், 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மாதகல் மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.


மாதகல் வாழ் மக்களுடன் பிரதேச பொது அமைப்புக்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமோக வரவேற்பளித்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) 
மாதகல் வாழ் மக்களுடன் பிரதேச பொது அமைப்புக்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமோக வரவேற்பளித்துள்ளனர்.

நேற்றைய தினம் (6) பகல் மாதகல் பகுதியை வந்தடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பிரதேச விவசாய அமைப்பு பிரதிநிதிகள் மாதகல் கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் பனம்பொருள் அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் மாதகல் கிராம அபிவிருத்தி சங்க சங்க பிரதிநிதிகள் ஆகிய பொது அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து வரவேற்றனர். மாதகல் சந்தியிலிருந்து பாணாவெட்டி குகனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்திற்கு அழைத்துவரப்பட்ட அமைச்சரவர்கள் அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பங்குகொண்டார். தேவஸ்தான குருக்கள் சுந்தரேஸ்வர சர்மா விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாதகல் சென்.ஜோசப் மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மகாவித்தியாலய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு அமைச்சரவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்.
பாடசாலை அதிபர் வீ.நடராசா தலைமையில் இடம்பெற்ற மேற்படி பாராட்டு விழாக்கூட்டத்தில் மாதகல் பங்குத் தந்தை ஆனந்தகுமார் நுணசை பாடசாலை அதிபர் கே.சிவநேசன் ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கியனார்கள். பாடசாலை மாணவிகளின் நடன கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம்பெற்றமை விசேட அம்சமாகும். இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஈபிடிபியின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரன் ஆகியோரும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’