இலங்கைக்கான விசாக் கட்டுப்பாடுகளை இந்தோனேசியா தளர்த்த வேண்டும் என இந்தோனேசியாவுக்கான இலங்கைத்தூதுவர் மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தோனேசியா உல்லாசப் பயணத்துறை அமைச்சர் ஜெரோ வாசிக்குடனான சந்திப்பின் போதே இவ் வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். ஜகர்த்தாவில் உள்ள உல்லாசப் பயணத்துறை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கைக்கான இந்தோனேசியத்தூதுவர் மற்றும் உல்லாசப் பயணத்துறை அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட கால இராஜதந்திர உறவுகள் காணப்படுவதாகவும் இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டுமானால் விசாக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும் நந்தா மல்லவராச்சி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’