வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 ஜூன், 2010

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 42.3 வீதத்தால் அதிகரிப்பு!

புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்து ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 42.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கைச் சுற்றுலா சபை தெரிவித்துள்ளது
அத்துடன் இலங்கை பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை வீதமும் முதலீட்டாளர்களின் வருகையும் அதிகரித்துள்ளதாகவும் இலங்கைச் சுற்றுலா சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளில் சுற்றுலாத்துறை பிரதான இடம் வகிப்பதுடன் கடந்த 2009 ஆம் ஆண்டு 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானம் கிடைத்துள்ளதாகவும் நடப்பாண்டின்  முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 174.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளது.
இனிவரும் காலங்களில் அத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கைச் சுற்றுலா சபை தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’