தமிழில் அறிமுகமானாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில்தான் இவர் நடித்து வருகிறார். கோவாவைச் சேர்ந்த இவர் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனை காதலிக்கிறார்.
ஐஃபா விழாவுக்கு ரிதேஷ் தேஷ்முக்கும் சென்றுள்ளார். எனவே காதலர் வழியில் ஜெனிலியாவும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவுக்குப் போவதன் மூலம் தென்னிந்திய திரையுலகை பகைத்துக் கொள்ள முடியும் என்று தெரிந்தும் அவர் பங்கேற்றுள்ளார் என்று இலங்கை செய்திகள் தெரிவித்தன.
இதையடுத்து தமிழுணர்வாளர்கள் கொதித்தெழுந்தார்கள்.இதனால் அவருக்கு தென்னகத்தில் ரெட் கார்டு போடும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஜெனிலியா தான் இலங்கை செல்லவில்லை என்று மறுத்துள்ளார். ஆனால் அவர் இலங்கை சென்றது உண்மை என்றும் பேசப்படுகிறது.
இந்த எதிர்ப்புகளுக்கு ஜெனிலியா, ’’ நான் ஐஃபா விழாவுக்குப் போனதாக வந்த தகவல் தவறானது. ஐயோ...நான் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை.
உண்மையில் நான் சாயிஃப் அலிகான் மற்றும் ஷாரூக்கானுடன் மேடையில் நடனம் ஆடுவதாக இருந்தது. மனீஷ் மல்ஹோத்ராவுடன் ரேம்ப் வாக் பண்ணவும் ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் தமிழர் போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பார்த்த பிறகு நான் வி்லகிக் கொண்டேன்.
நான் தமிழில் அறிமுகமானவள். தமிழ் சினிமாவை நேசிக்கிறேன். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் ஆசை உள்ளது.
தற்போது நான் மும்பையில்தான் இருக்கிறேன். நம்பிக்கை இல்லையென்றால் மும்பை வந்து பார்த்துக்கொள்ளுங்கள்.நான் தமிழரையும் தமிழ் உணர்வுகளையும் மதிக்கிறேன். நான் இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்’’ என்று கூறியிருந்தார்.
''இலங்கை பட விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை'' என்று ஜெனிலியா மறுத்திருக்கிறார்.
ஆனால் அவரது மறுப்பில் உண்மையில்லை என்றும், காதலர் ரிதேஷுடன் விழாவுக்கு முதலில் போனவர் ஜெனிலியா. விஷயம் தெரிந்து தமிழ் சினிமாவில் பரபரப்பான முடிவுகள் எடுக்கப்படுவது தெரிந்ததும் அங்கிருந்து ஓடிவந்து விட்டார். அவரது பாஸ்போர்ட்டை சோதித்தால் விஷயம் தெரிந்துவிடும், என்றும் நடிகர் சங்கம் தெரிவித்தது.
இதனால் தமிழர்களின் எதிர்ப்பை ஏன் சம்பாதித்திக்கொள்கிறோம் என்று நினைத்த ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
விஜய் கதாநாயகனாக நடிக்க, ஜெயம் ராஜா டைரக்ஷனில் அவர் தயாரிக்கும் 'வேலாயுதம்' என்ற புதிய படத்தில், ஜெனிலியா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
தடையை மீறி ஜெனிலியா இலங்கை படவிழாவில் கலந்துகொண்டதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் எடுத்துள்ள முடிவுக்குக் கட்டுப்பட்டு ஜெனிலியாவை நீக்கியுள்ளதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’