சூர்யாவும் ஜோதிகாவும் நீண்ட காலத்தின் , பின்னர் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இத்தம்பதியினருக்கு இரு வயதான தியா என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதற்காக, அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜோதிகா அட்மிட் செய்யப்பட்டார்.
மும்பையில் இருந்து ஜோதிகா உறவினர்களும், தமிழ்நாட்டில் சூர்யா உறவினர்களும் நேற்று இரவே மருத்துவமனையில் குவிந்துவிட்டனர்.
இன்று அதிகாலை 4.04 மணிக்கு சிசேரியன் மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு உறவினர்களும், சினிமா நண்பர்களும் போனிலும், நேரில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’