சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரின் முதல் சுற்றுப் போட்டியொன்றில் சிம்பாப்வே அணியிடம் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
பலம்பொருந்திய இலங்கை அணி, இளம் வீரர்களைக் கொண்ட சிம்பாப்வே அணியிடம் எட்டு விக்கட்டுகளினால் தோல்வியடைந்துள்ளது.சிம்பாப்வேயின் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய சிம்பாப்வே அணியின் தலைவர் சிக்கும்புரா முதலில் களத் தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இதன்படி களமிறங்கிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் சார்பில் அணித் தலைவர் திலகரட்ன தில்ஷான் 66 பந்துகளில் 78 ஓட்டங்களையும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உப்புல் தரங்க 69 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் உட்சயா, மொப்பூ மற்றும் க்ரீமர் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 47.5 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் மிக அபாரமாக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிரன்டன் டெய்லர் ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களையும், ச்சீபாபா 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் தில்சான் மற்றும் துசார ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.
மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பிரன்டன் டெய்லர் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’