வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 ஜூன், 2010

இன்றைய பேச்சுவார்த்தையில் திருப்தி ; ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு இணைந்து செயற்படும்-சுரேஷ் பிரேமசந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் சற்று முன் எமது  இணையதளத்திற்கு தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் , அகதி முகாம்களில் வசித்து வரும் மக்களின் சுகாதரம் மற்றும் கல்வி, மீளகுடியமர்த்தப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜனாதிபதியுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலமையில் கலந்து கொண்ட குழு, காணாமல் போன இளைஞர்கள் மற்றும் கைது செய்யப்பட்டு சிறைசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் விடுதலை சம்பந்தமா பேசப்பட்டதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
இது போன்ற பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதியுடன் தொடர்ந்து ஈடுபட இருப்பதாகவும், எமது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு பிற்பாடு இடம்பெறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’