வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜூன், 2010

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை! பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியுடன் டில்லி விஜயம்!

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை தொடர்பிலான பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டுதல் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பிலான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் நாளை (7) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.

நாளைய தினம் மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தும் ஜனாதிபதி அவர்கள் அதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாளை மறுதினம் (8) இந்தியா செல்லும் ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொள்கிறார்.
இதன் போது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து கூட்டுப் பிரகடனம் ஒன்றையும் வெளியிடவுள்ளது. இந்தக் கூட்டுப் பிரகடனத்தில் யாழ் குடாநாட்டின் பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் யாழ் நகர கலாசார கேந்திர மையம் மற்றும் அச்சுNலி கைத்தொழிற்பேட்டை தொடர்பிலான மேம்பாட்டு விடயங்களும் உள்ளடக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’