மண்ணித்தலை துறைமுகம் யுத்தம் காரணமாக போக்குவரத்தை முற்றாகவே நிறுத்தியிருந்தது. இத்துறைமுகம் ஊடான போக்குவரத்து இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீளவும் தமது இயல்பு வாழ்வை பெற்றுக் கொள்ளும் முன் அடையாளமாகவே இது அமைகிறது. எனப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மண்ணித்தலை துறைமுகம் யுத்தம் காரணமாக போக்குவரத்தை முற்றாகவே நிறுத்தியிருந்தது. இத்துறைமுகம் ஊடான போக்குவரத்து இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீளவும் தமது இயல்பு வாழ்வை பெற்றுக் கொள்ளும் முன் அடையாளமாகவே இது அமைகிறது. எனப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ் குடாநாட்டுக்கான கடற்போக்குவரத்து பாதை துறைமுகத்தை அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய தினம் (13) காலை வைபவ ரீதியாக நிகழ்ந்த இந் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் புஞ்சி நிலமே பொது நிர்வாக பிரதி அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி இந்திய நடிகர் விவேக் ஒப்ராய் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
மண்ணித்தலையில் காணப்படும் ஆயிரம் ஆண்டுக்கு மேலான பழமைவாய்ந்த சிவாலயத்தின் அருகிலேயே இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுடைய வாழ்வில் தொல்லியல் சார்ந்ததாக விளங்கும் இவ்வாலயத்தின் பெரும்பகுதிகள் பராமரிப்பு அற்ற சூழலில் பெரிதும் அழிவடைந்த நிலையிலே காணப்படுகிறது. இவ்வாலயத்தின் விமானம் மற்றும் கோமுகி படிகற்கல் என்பன சிதைவடைந்துள்ள நிலையில் இதனை மேலும் மேலும் சிதைவடையாமல் பாதுகாக்கப்பட வேண்டியது எமது கடமையாகும் என இவ்வாலயத்தை பார்வையிட்ட பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் திரு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இதேவேளை இவ்வாலயத்தை ஒத்ததாக ஒரு ஆலயத்தை அருகில் அமைப்பதற்கான முயற்சியை தாம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பனை மரங்கள் அடர்ந்த மணக்குன்றுகளைக் கொண்ட இப்பிரதேசம் ஒரு சுற்றுலா மையமாக ஆக்கப்படக் கூடிய சகல வளங்களையும் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகரிலிருந்து அரை மணித்தியாலங்களில் மணித்தலையை அடையமுடியமெனவும் மேலும் இருபது நிமிடங்களில் பூநகரி வாடியடி சந்தியை அடைய முடியுமெனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் இப்பகுதி பாடசாலை ஆசிரியர்கள் அரச உத்தியோகத்தர்கள் யாழ் நகரிலிருந்து இலகுவாக பயணிக்கும் வழியேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
























0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’