வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 ஜூன், 2010

இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம்; நடிகர் விவேக் ஒவ்ரோய் புகழாரம்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம் தொடர்பில் பொலிவூட் நடிகர் விவேக் ஒவ்ரோய் புகழ்ந்துள்ளார்.



இது தொடர்பில் எமது   இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த நடிகர் விவேக் ஒவ்ரோய், வடகுதிக்கான விஜயத்தின்போது தனக்கிருந்த சந்தேகங்கள் தெளிவடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்ச் சமூகமும் அரசாங்கத் தரப்பினரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், இலங்கையில் நிரந்த சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையில் இரு தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்திலுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான 53 இளம் ஜோடிகளுக்கு நேற்று நடைபெற்றிருந்த திருமண வைபவத்தில் விவேக் ஒவ்ராய் கலந்துகொண்டிருந்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’