வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 12 ஜூன், 2010

யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொலைபேசியூடாக கலந்துரையாடினார்!

இந்திய விஜயம் பாரிய வெற்றியெனவும் இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து மேலும் அதிகாரங்களை  பெறுவதற்கு இந்திய அரசு முதற்கொண்டு தமிழ்நாட்டு பாராளுமன்ற பிரதிதிகள் வரை ஆதரவு தெரிவித்திருப்பது தமது முயற்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.  (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இந்திய விஜயம் பாரிய வெற்றியெனவும் இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து மேலும் அதிகாரங்களை  பெறுவதற்கு இந்திய அரசு முதற்கொண்டு தமிழ்நாட்டு பாராளுமன்ற பிரதிதிகள் வரை ஆதரவு தெரிவித்திருப்பது தமது முயற்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற தொலைபேசி ஊடான பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தி மற்றும் இந்திய அமைச்சர்கள் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்தாகத் தெரிவித்துள்ளார். 

இவ் விஜயத்தின் போது அந்நாட்டு உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அரசியல் தீர்வு மீள்குடியேற்றம் வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதுடன் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து மேலும் அதிகாரங்களை  பெறுவதற்கு இந்திய அரசு முதற்கொண்டு தமிழ்நாட்டு பாராளுமன்ற பிரதிதிகள் வரை ஆதரவு தெரிவித்திருப்பதும் அதை ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அவர்கள் அதை நடைமுறைப்படுத்தும் எண்ணத்தோடு இருப்பது மாபெரும் அங்கீகாரம் என்றும் இதன்போது 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 

வடக்கு - கிழக்குப் பகுதிகளில் மீள்குடியேற்ற மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் இதற்கென ஆயிரம் கோடி ரூபா வழங்குவதற்கும் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கு புனரமைத்தல் மற்றும் பலாலி விமான சேவை புனரமைப்பு போன்ற சில திட்டங்களுக்கு உதவுவதற்கு வாக்குறுதி அளித்துள்ளன.

என்னைக் கைது செய்யக் கோரி தொடர்ந்த வழக்கானது உள்நோக்கம் கொண்டதும் அது என் மீது சேறு பூசும் செயலாகும் என்றும் அதை சட்ட ரீதியாக அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்.

இச்சந்திப்பில் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன், யாழ் மாநரக முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 







 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’