சுற்றாடலுக்குத் தீங்கு விளைவிப்போருக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் மட்டக்களப்பு நகரில்[`10௦. இன்று காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள 7 பாடசாலைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், மதத்தலைவர்கள், ஆசிரியர்கள், சுற்றாடல் அதிகாரிகள், உள்ளிட்ட பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மாவட்ட சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரி எஸ். உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஊர்வலம் மட்டக்களப்பு மாநகரின் பல வீதி வழியாகச் சென்று பொது நூலக முன்றலில் முடிவடைந்தது. பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். சுமார் இரு மணிநேரம் ஊர்வலம் நடைபெற்றது. மிகவும் வரவேற்றகத்தக்க அவசியமான விழிப்புப் போராட்டம். தற்போதெல்லாம் இலங்கையில் சுற்றுச் சுழல் மாசடைவதை தவிர்ப்பது பற்றி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. குப்பை கூழங்களை கண்;ட கண்ட இடங்களில் போடுதல், சிறப்பாக தமது வளவிற்குள்ளேயே போட்டு வைத்திருத்தலால் எற்படும் தீங்குகள் பற்றியும், இதனை செய்வோர் மீது அபராதமும், அறிவூட்டல்களும் நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன. வரவேற்கப்பட வேண்டிய விடயங்கள். உள்ளுராடசி மன்றங்கள் இவ்விடயத்தில் எவ்வித விட்டுக் கொடுப்பும் இன்றி நல்லவற்றை தொடர்ந்தும் செய்ய வேண்டும். குறிப்பாக யாழ் மாநகர சபை இவ்விடயத்தில் சிறப்பாக செயற்படுவதை நாம் வாழ்த்தாமல் இருக்க முடியாது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’