""தமிழினத்தையே அழிக்க முற்படும் இலங்கை அரசுடன், இந்திய அரசு செய்து கொண்டிருப்பது ஒப்பந்தங்கள் அல்ல, தமிழ் ஈழத்தை எரிக்க முற்படும் தீப்பந்தங்களே.''
இவ்வாறு ம.தி.மு.க. செயலர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறுஇலங்கையில் போரை நடத்தியது இந் திய அரசுதான் என்பதால், அதைக் கொண் டாடுவதற்காகவே இந்தியா வந்துள்ளார் மஹிந்த.
இலங்கை அரசுடன், டில்லி செய்து கொண்ட ஒப்பந்தங்கள். டில்லி ராஜ கட்டடத்தில் காந்தியார் கல்லறையில், "ஏழு பாவங்கள்' என்று எழுதப்பட்டிருக்கிறன. அத்தகைய பாவச் செயல்களை, இந்திய அரசு செய்துள்ளது.
ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்தில், ஜெனீவா நெறிகளை மண்ணில் புதைத்தது இலங்கை அரசு. இலங்கையில் மின்சார உற்பத்தி ஆயிரம் கோடி ரூபாவும், ரயில்வே உள்ளிட்ட மற்ற திட்டங்களுக்கு 4000 கோடி ரூபாவும் கொடுக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
இலங்கைக்கு இப்பொழுது, மேலும் 5000 கோடி ரூபாவைக் கொடுப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டும் அல்ல, தமிழகத்துக்கும், இந்தியாவுக்குமே எதிர்காலத்தில் பெருங்கேடாக முடியும். இலங்கைத் தீவில் தமிழ் ஈழம் அமைவதும் ஈழத்தமிழர்கள் வலுப்பெறுவதும் மட்டும்தான் தாய்த் தமிழகத்துக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கே பாதுகாப்பு அரணாக அமையும். ஆனால், சோனியா காந்தியின் கைப்பிடியில் ஆடுகின்ற இந்திய அரசு, இவற்றையெல்லாம் சிந்திக்காமல், தமிழ் இனத்தை அழிக்க துரோகத்துக்கு மேல் துரோகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’