வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 ஜூன், 2010

சம்பந்தர்-டக்ளஸ் தொலைபேசியில் பேச்சு

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டை எடுப்பது குறித்தும் அரசியல் ரீதியாக தமிழ்க் கட்சிகளை மேலும் நெருக்கமான ஒரு நிலையை எடுக்கவும், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கட்சிகள் பலவற்றுடன் கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தைகளை நடத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.
இதன் ஒரு பகுதியாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனும், தான் உரையாடியதாக அமைச்சர் டக்ளஸ் அவர் பிபிசியிடன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக டக்ளஸ் தம்முடன் தொலைபேசியில் உரையாடினார் என்று தமிழோசையிடம் உறுதி செய்த இரா.சம்பந்தன் அவர்கள், ஆனால் நேரில் இருவரும் இதுவரை சந்திக்கவில்லை என்றார். ஆனால் யாருடனும் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டக்ளஸ் தேவானந்தா
டக்ளஸ் தேவானந்தா
இருவரும் பேசிக்கொண்ட விஷயங்கள் குறித்துக் கேட்டபோது, அவர் மக்கள் நம்பிக்கையை பாதுகாக்கக்கூடிய  அளவில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த ஒரு முடிவையும் எடுக்கும் என்றார் சம்பந்தர்.
தமிழ்க் கட்சிகள் மத்தியில் பரந்துபட்ட அளவில் ஒரு கருத்தொற்றுமை வருவதைத் தாங்கள் எதிர்க்கமாட்டோம், வரவேற்போம் என்றார் அவர்.
இலங்கை அரசு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அல்லது அனுதாபத்துடன் இருந்த புலம்பெயர் தமிழர் பிரமுகர்கள் ஒன்பது பேரை, தடுத்துவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலி இயக்கப் பிரமுகர் கேபி என்ற குமரன் பத்மநாதன் அவர்களின் ஊடாக இலங்கைக்கு வரவழைத்து, அவரை சந்திக்க அனுமதித்து, வட மாகாணத்துக்கு அவர்களை அழைத்து சென்று , புனர்வாழ்வு நடவடிக்கைகளை பார்வையிட அனுமதித்தது பற்றி கேட்டதற்கு, இது குறித்து ஊடகங்கள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டோம், அரசுடன் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவரங்கள் தமக்குத் தெரியாது என்றார் சம்பந்தன்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’