தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இனிவரும் ஆண்டுகளில் தமிழர்கள் வாழும் பிற நாடுகளிலும் செம்மொழி மாநாட்டினை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடைபெற வேண்டும் என்ற கருத்து தமிழறிஞர்கள், ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலாக தமிழை மேலும் படிப்படியாக வளர்த்து உயர்ந்த கோபுரத்தில் அமர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதுதான் ந்டந்து முடிந்த செம்மொழி மாநாட்டின் சாதனையாகக் கருதுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’