யுத்த காலத்தின் போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த பொது மக்களில் சுமார் 25ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மக்கள் இவ்வருட இறுதிக்குள் மீள்க்குடியேற்றப்படுவர் என்று பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
இதேவேளை மீள்க்குடியேற்றப்பட்டுள்ள பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான உதவிகளை வழங்குவதற்காக அம்மக்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகள் திறக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாசிப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது 640 கிராமங்கள் உள்ளடங்கிய 1,474 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு மீட்டக்கப்பட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் சுமார் 2இலட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அமைச்சர், ஏனையோர் இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுவர் என்று சுட்டிக்காட்டினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’