வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 ஜூன், 2010

புலி ஆதரவாளர்களின் கோபம்!


கே : கொலை ஆள் கடத்தல் என வழக்குகளில் சிக்கி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்ஷவுடன் இந்தியா வந்தது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறதே? இது பற்றி துக்ளக் கருத்து என்ன? 
ஜி. சுந்தர்ராஜன் சென்னை-42

கே : கொலை ஆள் கடத்தல் என வழக்குகளில் சிக்கி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்ஷவுடன் இந்தியா வந்தது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறதே? இது பற்றி துக்ளக் கருத்து என்ன?

ப : டக்ளஸ் தேவானந்தா இதற்கு முன்பே சில ஆண்டுகளில் பல முறை இந்தியா வந்து சென்றிருக்கிறார். பல முக்கியஸ்தர்களை (அரசியல் தலைவர்கள் உட்பட) சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்த அவருடைய விஜயங்கள் ரகசியமானவை அல்ல. அப்போதெல்லாம் எழாத எதிர்ப்பு இப்போது எழுந்துள்ளது விசித்திரமாக இருக்கிறது.

புலிகள் ஒடுக்கப்பட்டதிலிருந்து புலிகளின் இந்திய ஆதரவாளர்களுக்கு ராஜபக்ஷ மீது கடும் கோபம். அதை அவர்கள் வெளிக்காட்டுகிறபோது, டக்ளஸ் போன்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். டக்ளஸ் தேடப்படுபவர் என்று சொல்லப்படுவதை அவர் மறுத்திருக்கிறார்; இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக தன் மீது உள்ள குற்றச்சாட்டுகள் ரத்தாகி விட்டன என்றும் அதை இந்திய அரசு ஏற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதற்கு இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை.

புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்திருப்பவர்களில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். புலிகளின் மிருக வெறியை எதிர்த்ததால் அவர் பலமுறை புலிகளால் பயங்கரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஒருமுறை நடந்த கடும் தாக்குதலில் அவர் தொடர்ந்து பல மாதங்கள் ஆஸ்பத்திரியில் கவலைக்கிடம் என்ற நிலையில் இருந்தார். தெய்வாதீனமாக உயிர் பிழைத்த பின்னரும் சற்றும் அஞ்சாமல் புலி எதிர்ப்பைத் தொடரத் தயங்காதவர் அவர். இதனாலேயே இங்குள்ள புலி ஆதரவாளர்கள் அவர் மீது கோபம் கொண்டு, அவரைப் பற்றி ஏதாவது சொல்லி அவரை ஒரு குற்றவாளி ஆக்கிவிட முடியாதா என்று முயற்சிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’