வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 ஜூன், 2010

கட்சியின் ஒருசாராரைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்ச்சிக்க ஜாதிக்க ஹெல உறுமிய புதிய திட்டம்

ஜனாதிபதிக்கு தகவல்களை வழங்கும் கட்சிக்குள் இருக்கும் ஒற்றர் என சந்தேகத்திற்குள்ளாகியிருக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும், மேல் மாகாண அமைச்சருமான உதய கம்பன்பிலவைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கும் தந்திரோபாயத்தைக் கடைபிடிக்க ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர்கள் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தந்திரோபாய நடவடிக்கையின் ஒரு கட்டமாக நேற்று நடைபெற்ற ஜாதிக்க ஹெல உறுமயிவன் ஊடகச் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்த கம்பன்பில ஜனாதிபதிக்கு நெருக்கமான எல்லாவல மேதானந்த தேரரின் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்தார்.
எல்லாவள மேதானந்த தேரரை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு காரணங்கள் இருந்ததாகவும், அண்மையில் நடைபெற்ற கட்சியின் சம்மேளனத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கம்பன்பில கூறியுள்ளார். மாநாடு நடைபெறுவதற்கு முன்னரே எல்லாவல மேதானந்த தேரர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தததாகவும் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
கம்பன்பிலவினால் ராஜபக்~ ஆதரவாளரான எல்லாவள மேதானந்த தேரரின் குற்றச்சாட்டுக்களுக்கு இவ்வாறு பதிலளிக்கப்படும் போது ஜாதிக்க ஹெல உறுமவின் ஊடகப் பேச்சாளர் நி~hந்த சிறி வர்ணசிங்க அமைதியாக காணப்பட்டார்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’