வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 ஜூன், 2010

தமிழ் கட்சிகள் இணைந்து பொது உடன்பாடு குறித்து பேச்சு! இன்று மாலை கொழும்பில் சந்திப்பு!!

தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான அணுகுமுறை குறித்து பொது உடன்பாடு காணவும் மற்றும் அன்றாட அவலங்களுக்கு உடனடித் தீர்வு காண்பதில் ஒருமித்து செயற்படும்  நோக்கிலும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை கொழும்பில் ஏற்பாடாகியுள்ளது. இச்சந்திப்பின் போது அனேகமான தமிழ் கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா), சிறீ - தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஈழப்புரட்சி அமைப்பு, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் மனிதஉரிமை ஆவர்வலருமான செறின் சேவியர் அவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.
இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய அணுகு முறை குறித்து அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இடையில் ஒரு பொது உடன்பாடு காண்பதும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து தமிழ் கட்சிகளும் செயற்படுவதற்கான அரசியல் தளத்தை உருவாக்குவதோடு மட்டுமன்றி தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலும் அனைத்து கட்சிகளிடையேயும் ஒருமித்த செயற்பாடு இருக்க வேண்டும் என்றும் இவைகளே இச்சந்திப்பின் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற சந்திப்புகளும் பொது உடன்பாட்டிற்கான முயற்சிகளும் முன்னரும் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’