கொழும்பு தெமட்டகொட விபுலானந்த தமிழ் மகாவித்தியாலயத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் இயன்ற வரையிலான பங்களிப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (24) விபுலானந்த தமிழ் மகாவித்தியாலய வளாகத்தினுள் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ சிவசக்தி விநாயக ஆலய மகாகும்பாபிசேக இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடசாலைக்கெனப் புதிதாகப் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றுள்ள ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலய திருப்பணிகள் எதிர்காலத்தில் நல்ல முறையில் நடைபெற வேண்டுமென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் நிகழ்வில் கலந்து கொண்டமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.
அதிபர் போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் தேவைகள் தொடர்பாக அதிபர் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்திருந்தார்.
நிகழ்வில் பாடசாலையின் முன்னைநாள் அதிபரும் கல்விப்பணிப்பாளருமான கணேசராஜா மேல்மாகாண சபை உறுப்பினர்களான குருபரன் இராஜேந்திரன் மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிம்மஸ்ரீ ஆர்.பாபு சர்மா உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
இதன் போது மேல்மாகாண சபைக்கூடாகவும் பங்களிப்புகளை வழங்க தாம் தயாராக இருப்பதாக அதன் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
பாடசாலை சார்பில் அதன் அதிபர் போல்ராஜ் அமைச்சர் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததைத் தொடர்ந்து ஏனைய அதிதிகளும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
கோயிலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனப் பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’