வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 ஜூன், 2010

வடமராட்சி கிழக்கு தாளையடி புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா..!

வடமராட்சி கிழக்கு தாளையடி புனித அந்தோனியார் தேவாலய வழிபாடும் திருச்சொரூப பவனியும் நேற்று இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
வடமராட்சி கிழக்கு தாளையடி புனித அந்தோனியார் தேவாலய வழிபாடும் திருச்சொரூப பவனியும் நேற்று இடம்பெற்றது.

கடந்த 2006ம் ஆண்டு முகமாலை நாகர்கோவில் முன்னரங்குப் பகுதியில் புலிகள் இயக்கத்தினர் தாக்குதலை வலிந்து ஆரம்பித்ததன் பின்னர் வடமராட்சி கிழக்கு மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன் பின்னர் அப்பகுதிக்கு மக்கள் செல்ல புலிகள் இயக்கம் அனுமதிக்கவில்லை. தற்போது சகல பகுதிகளும் படையினரால் மீட்கப்பட்ட பின்னர் தாளையடி புனித அந்தோனியார் தேவாலய வழிபாடு இடம்பெற்றுள்ளது.

மருதங்கேணி 55வது படையணித் தளபதி பிரிகேடியர் சுசந்த பெரேரா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்து வழிபாட்டில் ஈடுபட்டனர். சில்லாலை மாதகல் யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் வவுனியா போன்ற பகுதியில் இருந்து மக்கள் தனியார் பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஹைஸ் வான்களில் புதுக்காட்டுச் சந்தி ஊடாக மருதங்கேணிச் சந்தி தாளையடி தேவாலயத்தை வந்தடைந்தனர். காலை 10.00 மணிக்கு வழிபாடுகள் ஆரம்பமாகி 1.00 மணியளவில் நிறைவடைந்தது. வழிபாட்டில் கலந்து கொண்ட 55வது படையணி பிரிகேடியர் தேவாலயத்திற்கு வந்திருந்த பக்தர்களிடம் தாம் மக்கள் மீளக் குடியேறுவதற்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். இராணுவத்தினரின் ஏற்பாட்டில் தேவாலயத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் மதிய போசனமும் வழங்கினர்.   


 



 





      

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’