வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 ஜூன், 2010

எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : அமைச்சர் தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்களின் பின்னர் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான யோசனைத் திட்டம் குறித்து நாடா ளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் அடுத்த வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
உத்தேச சட்ட மூலம் குறித்து சட்ட மா அதிபர் ஆராய்ந்து வருகின்றார்.
புதிய தேர்தல் முறைமையின் கீழ் 70 வீதமான உறுப்பினர்கள் தொகுதி வாரியாகவும், 30 வீதமான உறுப்பினர்கள் விருப்பத் தெரிவின் மூலமாகவும் தெரிவு செய்யப்படவுள்ளனர்" என்றார்.
அதேவேளை, தேர்தல் தொகுதி மீள் நிர்ணய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’