தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் முன்வைத்துள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் முன்வைத்துள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (6) கைதடியில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரைநிகழ்த்தும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தென்மராட்சி மேற்குப் பகுதி மக்களால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் சி.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் அவர்கள் 13வது திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் யாப்பில் இடம்பெற்றுள்ளதுடன் சர்வதேசமும் இந்தியாவும் அதற்கு ஆதரவளித்துள்ளதுடன் தென்னிலங்கை மக்களும் இத்திருத்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
நீண்டகாலமாக அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவுமற்ற நிலையில் இருக்கும் இப்பகுதியை அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு செயல்பட்டுவரும் அபிவிருத்திக் குழுவினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் அழிந்து மீளக் கட்டியெழுப்பும் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிப்பதுடன் கிராமங்களின் தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றுவதற்கும் முன்வந்துள்ளமை ஒரு நல்ல அறிகுறியாகும் என்றும் தெரிவித்தார்.
மக்களின் உடனடித் தேவைகள் போக்குவரத்து குடிநீர் மின்சாரம் கல்வி போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் தென்மராட்சி மேற்குப் பிரதேச அபிவிருத்திக் குழுவினர் ஆர்வம் காட்டிச் செயலாற்றி வருவதால் அக்குழுவின் ஊடாக கிராமங்களின் தேவைகளை தமது கவனத்துக்கு கொண்டு வருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தென்மராட்சி ஈ.பி.டி.பி பொறுப்பாளர் சி.பாலகிருஸ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’