வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜூன், 2010

களனியில் சிறுமி கடத்தல்;சந்தேக நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க உத்தரவு

களனிப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபரை அங்கொடை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

குறித்த சிறுமி சமய வழிபாடுகளில் ஈடுபடும் பொருட்டு, களனியிலுள்ள கோவிலொன்றுக்கு தனது பெற்றோருடன் சென்றிந்தபோதே காணாமல் போனார்.
இந்நிலையில், குறித்த சிறுமி கடந்த மாதம் மாரவிலப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டிருந்த அதேவேளை, குறித்த சிறுமியுடன் இருந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேற்படி சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’