வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 ஜூன், 2010

கனடாவுக்கு வந்த கப்பல் அகதிகளில் 25 பேர் தமிழீழ விடுதலைப்புலிகள்???

கடந்த வருடம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகத்திற்கு வந்தடைந்து, தற்போது அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் 76 பேரில் 25 பேர் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என கனடாவின் அரச உள்ளக தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

இவர்கள் புலனாய்வு மற்றும் முக்கிய பதவிகளை வகித்தவர்கள் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த அகதிகள் தொடர்பில் ஆஜராகும் சட்டத்தரணி டக்ளஸ் கெனொன் இந்த 25 பேரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எனில், இந்த வருட ஆரம்பத்தில் இவர்களை விடுதலை செய்வதற்கு கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வாறு இணங்கினார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயத்தை, வெளியிடும் முன்னர் அது தொடர்பாக ஆயந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அது நிரூபிக்கப்படவேண்டும் என டக்ளஸ் கெனொன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்துள்ள, கனடாவின் எல்லையோர பாதுகாப்பு அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’