வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 ஜூன், 2010

மன்னாரிலிருந்து ஜெலிக்கனைற் குச்சிகளை எடுத்துச்சென்ற மூவர் பொலிஸாரால் கைது

மன்னாரிலிருந்து ஜெலிக்கனைற் குச்சிகளை சட்டவிரோதமாக எடுத்துச்சென்ற மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.



இன்று நண்பகலிற்கு பிறகு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப்புறப்பட்ட பேருந்து பொலிஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அதிலிருந்த ஏறத்தாழ 500 ஜெலிக்கனைற் குச்சிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக மன்னார் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து இன்று 12.30 மணியளவில் கொழும்பு நோக்கிப்புறப்பட்ட தனியார் பேருந்தை மன்னார் பிரதான பாலத்தை அன்மித்தப்பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் உள்ள பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது இதனைக் கைப்பறியிருக்கின்றனர். கைப்பற்றப்பட்ட பொருட்களை அடிப்படையாகக் கொண்டு கின்னியா பகுதியைச்சேர்ந்த மூவர் சந்தேகத்தின் பெயரில் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் என்ன நோக்கத்திற்காக மேற்படி ஜெலிக்கனைற் குச்சிகளை மன்னாரிலிருந்து எடுத்துச்செல்ல முயற்சித்தார்கள் என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்கள் நாளைய தினம் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார்கள் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. __

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’