வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 ஜூன், 2010

விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் இணையத் தளங்களினால் செயற்படுகின்றனர் - கோத்தபாய

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான இணையத் தளங்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத் தலைமையகமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரித்தானியாவில் இயங்கும் குளோபல் தமிழ் போரம், அமெரிக்காவில் நாடு கடந்த அரசாங்கக் குழு, என்பனவற்றுடன் நோர்வேயிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருப்பதாகவும், இவர்களது அநேகமான செயற்பாடுகள் இணையவழியில் ஒருங்கமைக்கப்படுவதாகவும். அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
வெளியிலிருந்து புலிகளினால் சிறிலங்காவிற்குள் ஊடுருவல் நிகழாதிழருப்பதற்காக, சிறிலங்காவின் கடற்பரப்பில் கடற்படையினர் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். உள்நாட்டில் புலிகளின் செயற்பாடுகள் மீண்டும் கிளர்ந்தெழாத வகையில், பொதுமக்களுடன் நல்லுறவைப் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையில் தற்போது இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாகவும், அது மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’