வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 மே, 2010

புதுடில்லி தாக்கப்படலாம் என எச்சரிக்கை

புதுடில்லியில் உள்ள முக்கிய மார்க்கெட் பகுதிகளில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புக்களை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்படியான பகுதிகளுக்கு செல்வதை தங்கள் நாட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

புதுடில்லி காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றும், மக்களிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், டெல்லியில் நெரிசல் மிகுந்த மார்க்கெட் பகுதிகளான சாந்தினி செளக், கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ், கரோல்பாக், மெஹரெளலி மற்றும் சரோஜினி நகர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்காடிப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்


முன்னர் இடம் பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலை ஆராயும் காவல்துறையினர்
ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த உத்தரவு வரும் வரை புதுடில்லியில் உள்ள அனைத்து மார்க்கெட் பகுதிகளையும், வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் நடமாடும் பகுதிகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் தனது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.
வணிக வளாகங்கள் தவிர, முக்கிய ஹோட்டல்கள், அரசியல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நாடுகள் இதற்கு முன்பும் இதுபோன்ற எச்சரிக்கைகளை வெளியிட்டு வந்தாலும் கூட, இந்த முறை தீவிரவாதத் தாக்குதலுக்கான சமிக்ஞைகள் அதிகம் கிடைத்திருப்பதால், எச்சரிக்கையும் அதற்கு ஏற்றபடி கடுமையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’