சென்னை யின் தென் கிழக்கே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில பகுதியில் லேசான மழை யோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று மாலை முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கு இந்த காற்றழுத்த தாழ்வு நிலையே காரணமாகும்.இந்த தாழ்வு நிலையால் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த திடீர் மழையால் இதனால் கோடை வெயிலில் நொந்து போன மக்களுக்கு தற்காலிகமாக நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இடி தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு:
இந் நிலையி்ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பொன்மனை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட மழையில் இடி- மின்னல் தாக்கி ரசல்ராஜ் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சின்ன நாடார் என்பவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்த ரசல்ராஜின் மனைவி புஷ்பலதாவுக்கு நிவாரண நிதியாக 1 லட்சம் ரூபாயும், காயமடைந்த சின்ன நாடாருக்கு ரூ. 2,500ம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’