வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 16 மே, 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்துதலில் கூட்டுறவுத்துறையானது துரித அபிவிருத்தி அடைந்து வருகின்றது - மாகாண அமைச்சு செயலாளர் தெரிவிப்பு


வடபிராந்திய கூட்டுறவுத்துறை சார்ந்த தலைவர்கள் பொது முகாமையாளர்கள் மற்றும் கூட்டுறவாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை இன்று காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமானது. (படங்கள் வீடியோ இணைக்கப்பட்டுள்ளன
வடபிராந்திய கூட்டுறவுத்துறை சார்ந்த தலைவர்கள் பொது முகாமையாளர்கள் மற்றும் கூட்டுறவாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை இன்று காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமானது.
வடமாகாண உள்ளுராட்சி மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி ரொமேஷ் தலைமையில் ஆரம்பமான இப்பயிற்சிப்பட்டறை ஆரம்ப நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களும் சிறப்பு அதிதிகளாகப் பங்குகொண்டனர்.
இந்நிகழ்வினை ஆரம்பிவைத்து தலைமையுரையாற்றிய வடமாகாண உள்ளுராட்சி மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி ரொமேஷ் அவர்கள் கூட்டுறவுத்துறையின் வளர்ச்சி மற்றும் செயற்பாடுகள் குறித்து எடுத்துரைத்ததுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூட்டுறவுத்துறை மேம்பாடு தொடர்பாக காட்டிவரும் அக்கறையினை விபரித்ததுடன் அதற்கு வடமாகாண ஆளுநர் உறுதுணையாக செயற்பட்டு வருவதையும் தெரியப்படுத்தினார். மேலும் இப்பயிற்சிப்பட்டறை ஊடாக கூட்டுறவுத்துறையானது சிறப்பான செயற்பாடுகளையும் சிறந்த திட்டமிடல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இப்பயிற்சிப்பட்டறை மிகவும் உறுதுணையாக விளங்கும் என்பதையும் தெரியப்படுத்தினார்.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில் கடந்தகாலங்களில் சிறப்பான பல சேவைகளை மக்களுக்கு வழங்கிவரும் கூட்டுறவுத்துறையானது மேலும் சிறப்பான செயற்பாடுகளை மேற்கொள்ள மாகாண சபையானது உரிய உதவிகளை வழங்கும் என்பதுடன் இச்செயற்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதுணையாக விளங்குவது சிறப்பான விடயம் என்பதையும் எடுத்துக்கூறினார்.
இன்றையதினம் ஆரம்பமான கூட்டுறவாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையில் சிறப்புரையாற்றிய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூட்டுறவுத்துறையின் வெற்றியே மக்களின் பலமாகும். முன்னர் மிகச்சிறந்த நிலைமையில் செயற்பட்ட எமது கூட்டுறவுத்துறையானது கடந்தகால யுத்த அனர்த்தங்களினால் பின்னோக்கி தள்ளப்பட்டுவிட்டது. அதனை நாம் பழைய நிலைமைக்கு கொண்டுவருவது மட்டுமன்றி நாட்டின் ஏனைய பிராந்திய கூட்டுறவு துறையினரின் செயற்பாடுகளுக்கு எவ்வகையிலும் குறைவற்ற வகையில் முன்னோக்கி கொண்டு செல்லுதல் வேண்டும். குறிப்பாக கூட்டுறவுச் சங்கங்கள் தமக்கிடையே ஆரோக்கியமான போட்டி நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதுடன் தாமும் மேம்பாடடைய முடியும். இதற்கு இக்கூட்டுறவு பயிற்சிப்பட்டறையானது பெரிதும் துணைபுரியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டுறவுப் பயிற்சிப்பட்டறை ஆரம்ப நிகழ்வில் நன்றியுரையாற்றிய சாவகச்சேரி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தலைவர் அவர்கள் வடபிராந்திய கூட்டுறவுச் சங்கங்கள் ஒவ்வொன்றினதும் முன்னேற்றத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காட்டிவரும் அக்கறையினை நன்றியுடன் நினைவுகூர்ந்ததுடன் குறிப்பாக யாழ். கூட்டுறவாளர்களை கொழும்பிற்கு அழைத்துச்சென்று ஜனாதிபதி அவர்களையும் பசில் ராஜபக்ச அவர்களையும் சந்திக்க வைத்ததன் ஊடாக எமது தேவைகளையும் கோரிக்கைகளையும் அரச உயர் மட்டத்திற்கு கொண்டு சென்றமைக்காக அனைத்து கூட்டுறவாளர்களினதும் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுவதாக கூறியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’