வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 16 மே, 2010

18ஆம் திகதிக்கு முன் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜ.தே.மு. அழுத்தம்


யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாளை மறுதினம் 18ஆம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் அத்தினத்துக்கு முன்னர் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனநாயக தேசிய முன்னணி, அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த உண்மையான வீரன் ஜெனரல் சரத் பொன்சேகா எனும் மரியாதை என்றும் மக்கள் மத்தியில் உள்ளது. அதனால் அவரை விடுதலை செய்து தாங்கள் நன்றிக்கடன் உள்ளவர்கள் என்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு தற்போது சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று ஜ.தே.மு.வின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன், யுத்த வெற்றியின் ஒருவருட பூர்த்தியினை முன்னிட்டு தமது கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "அதிஷ்டான பூஜை" நிகழ்வில் முன்னாள் இராணுவ தளபதி என்றவகையில் அவர் கலந்துகொள்ள இடமளிக்குமாறும் விஜித்த ஹேரத் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதேவேளை அந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அனோமா பொன்சேகா, தனது கணவனே இந்த வெற்றியின் நாயகன் என்று இதய சுத்தியுடன் மக்கள் நம்புகின்றனர். அதனால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’