இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்டுவிட்டர் கணக்கினூடாக மற்றுமொரு சாதனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தங்களது நடவடிக்கைகளையும் சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் இதர விடயங்களைப் பரிமாறுவதற்கும் ட்விட்டர் கணக்கு உதவுகிறது. தற்கால சமுதாயத்தினரிடையே ட்விட்டர் பரவலாக பேசப்படுகிறது.
இதில் http://twitter.com/sachin_rt என்ற ட்விட்டர் கணக்கை தன்னகத்தே கொண்டுள்ள சச்சின், அதனை ஆரம்பித்த 20 மணித்தியாலங்களுக்குள் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் இணைந்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கரின் ட்விட்டர் இணையக் கணக்கினை பின்பற்றுவோரின் எண்ணிக்கை நிமிடத்துக்கு 40 இற்கும் மேலாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் தனிப்பட்ட கணக்குகளை ஆரம்பிக்குமாறு பிள்ளைகள் கேட்டுக்கொண்டதாகவும் அதனால் ட்விட்டர் கணக்கொன்றை ஆரம்பித்தாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ,
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’