வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 மே, 2010

நைஜீரிய ஜனாதிபதி காலமானார்

நைஜீரிய ஜனாதிபதி உமறு யார் அடுவா தனது 58ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இவர் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றுக் காலமானதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவரது மறைவை முன்னிட்டு, நைஜீரியாவில் ஏழு நாள்கள் துக்கதினத்தை அனுஷ்டிக்குமாறு நைஜீரிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இவரது இறுதிச் சடங்குகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது.
உமறு யார் அடுவா 2007ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பதில் ஜனாதிபதியாகக் கடமையாற்றி வரும் துணை ஜனாதிபதி குட்லக் ஜொனதன் விரைவில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’