மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக மீள்குடியேற்ற நடமாடும் சேவையொன்று இடம்பெற்றுள்ளது.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையின்போது வீடமைப்பு அதிகாரசபை, புனர்வாழ்வு, சமுர்த்தி, விவசாயம், கடற்றொழில், நன்னீர் மீன்வளர்ப்பு, போக்குவரத்து, மின்சாரசபை, நீர்ப்பாசனம், காணி மற்றும் கால்நடை வளர்ப்பு உட்பட பல்வேறு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலும், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம்
அருமைநாயகத்தின் அனுசரனையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நடமாடும் சேவையின்போது குறித்த பகுதி மக்களால் 1689 பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.
இவற்றில் சுமார் 800 பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உடனடியாக வழங்கப்பட்டதாகவும், ஏனைய பிரச்சினைகள் மேலிடங்களினால் பொறுபேற்கப்பட்டதாகவும் வாகரை பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’