வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 மே, 2010

பொலிஸார் இடமாற்றத்திற்கு தான் காரணமில்லை - அமீர் அலி மறுப்பு


வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 110 பொலிஸ் உத்தியோகத்தர்களின் திடீர் இடமாற்றத்திற்கு தான் எந்தவிதத்திலும் காரணமில்லை என்று முன்னாள் அமைச்சர் அமீர் அலி சற்று முன் எமது  இணையத்தளத்திடம் மறுப்பு தெரிவித்தார்

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றத்திற்கு அமீர் அலியே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக எமது  இணையதளம் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில பொலிஸ் உயர் அதிகாரிகளும் தான் தேர்தலில் வெற்றியடையக் கூடாது என்பதில் முனைப்பாக செயற்பட்டார்கள்.
மேலும், இவர்கள் தேர்தல் தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக செயற்பட்டார்கள். அத்துடன் இவர்கள் வாக்களிக்கச் சென்ற மக்களை வாக்களிக்காமல் தடுத்தார்கள்.
இதன் காரணமாக இவர்கள் மீது 350க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இதற்கினங்க விசேட பொலிஸ் குழுவொன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட பின்னரே இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனை விடுத்து விட்டு தன் மீது குற்றஞ்சாட்டுவது தவறு என்றும் எந்தவிதமான அதிகாரமும் அற்ற ஒரு முன்னாள் அமைச்சரால் எப்படி இந்த திடீர் இடமாற்றத்தை மேற்கொள்ள முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’