வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 மே, 2010

எவரையும் இழிவுபடுத்தும் உரிமை ஊடகவியலாளருக்கு இல்லை - ஊடகத்துறை அமைச்சர்

எவரையும் இழிவுபடுத்தவோ அல்லது மற்றையோர் மனங்களைப் புண்படுத்தவோ ஊடகத்துறையினருக்கு எந்த வகையிலும் உரிமையில்லை என்று தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.
நாட்டின் நடப்பு கள நிலவரங்களை எழுதும் அதேவேளை அரசாங்கம் எதை செய்தாலும் அதற்கு விரோதமாக எழுதும் போக்கையும் சிலர் கொண்டுள்ளனர். எனினும் நான் அனைத்து ஊடகவியலாளருடனும் சுமுகமாக செயலாற்றுவேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கெஹெலிய நேற்று (16) கண்டியில் உள்ள மல்வத்த மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரரினது ஆசிபெற்றபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கண்டி பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். கண்டி நகரான மரபுரிமை நகரை பாதுகாப்பது எமது அனைவருடைய கடமைப்பாடாகும்.
மேலும் அமைச்சர் பௌத்த இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ மத வழிபாட்டு நிலையங்களுக்கு சென்று அங்குள்ள மத குருக்களிடமும் ஆசி பெற்றார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’