வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 மே, 2010

நக்சலைட்களை ஒழிக்க விமானத் தாக்குதல் நடத்த வேண்டும்- ப.சிதம்பரம்


சட்டிஸ்கர் மாநிலம் தான்டேவாடா மாவட்டத்தில் அப்பாவி மக்கள் பயணம் செய்த பேருந்தை கண்ணிவெடி வைத்து நக்சலைட்டுகள் தகர்த்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,
நக்சலைட்களை ஒழிக்க விமானப்படை தாக்குதலை நடத்த உத்தரவிடும் அதிகாரம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று தான்டேவாடா மாவட்ட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செயலுக்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நக்சல்களுக்கு எதிரான வேட்டையில் எனது அமைச்சகத்திற்கு குறிப்பிட்ட அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. இதை அதிகரிக்க வேண்டும் என பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்.
குறிப்பாக நக்சலைட்டுகளை ஒழிக்க விமானப் படையை பயன்படுத்த வேண்டும். எனது இந்த எண்ணத்தைப் போலவே நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள மாநில முதல்வர்களும் கருதுகிறார்கள். இந்த அதிகாரத்தை உள்துறைக்கு தர வேண்டும் என பிரதமரிடத்தில் கூறியிருக்கிறேன்.
எங்களிடம் உள்ள சில அதிகாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு நக்சல் வேட்டையை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என்றார்.
உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், நக்சல்கள் பாரபட்சம் பார்க்காமல், கொலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறவர்கள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அப்பாவி மக்களை இலக்கு வைத்துத்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
நக்சலைட்களுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததி ராய் போன்றோர் இந்த சம்பவத்தை வரவேற்கிறார்களா என்பதை விளக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’