வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 மே, 2010

சாவகச்சேரி நீதிவானுக்கு பாதுகாப்பு வழங்க பிரதம நீதியரசர் உடனடி நடவடிக்கை


யாழ்.சாவகச்சேரி நீதிவான் கே.ஜே.பிரபாகரனுக்கு பாதுகாப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா உறுதியளித்துள்ளார்.
இதனை அடுத்து வட மாகாண சட்டத்தரணிகள் மேற்கொண்டுவந்த பணிப் பகிஷ்கரிப்பு இன்றுடன் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் தமது பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்தது.
யாழ். சாவகச்சேரி வர்த்தகர் மகனின் படுகொலை தொடர்பில் மேற்படி நீதிவான் வழக்கு விசாரணைகளை நடத்தியிருந்தார். இந்நிலையிலேயே, குறித்த நீதிவானுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களின் சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்ததான சந்தேகத்தின் பேரில் யாழ். மாநகரசபை பிரதி மேயர் இளங்கோ (றீகன்) மற்றும் ஈ.பி.டி.பி.யின் தென்மராச்சி இணைப்பாளர் சாள்ஸ் என்றழைக்கப்படும் அலக்ஸாண்டர் சூசைமுத்து ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’