வெட்கி தலை குனிந்தது
மனித குலத்தின் எதிரிகள்
மகேஸ்வரியை கொன்ற போது..
ஈ எறும்பை கொல்வதே
பாவம் என்று கருதிய
பூவனத்தை சுட்டெரித்த போது..
இதயம் வலியெடுத்து
துடி துடிக்க வைத்த
இந்த படுகொலைதான்
கொடியவனின் குற்றப்பத்திரிகையில்
உறுதியுள்ள சாட்சியமாக
குருதி கொண்டு எழுதப்பட்டது.
தீர்ப்பெழுதும் காலங்களுக்காக
வரலாறு இப்போதெல்லாம்
அதிகம் காத்திருப்பதில்லை..
மே 13 இல்
சிந்தப்பட்ட குருதிக்கு
ஆண்டொன்று காத்திருந்து
மே 18 தீர்ப்பெழுதிப்போனது..
ஆனாலும் மகேஸ்வரியின்
மனிதநேய மனம்
ஆசைப்பட்டது போல்
எதிரிகளை மன்னிப்பதற்கு
மனித குல வரலாறு
சம்மதம் வழங்க மறுத்துவிட்டது!
கரவெட்டியில் சிந்திய குருதி
வன்னி வெளி தாண்டி
நந்திக்கடலோடு பேசியது..
மானிடத்தை நேசித்த
மகேஸ்வரியின் குருதி வெள்ளம்
நந்திக்கடலையே
அலையடித்து குமுற வைத்தது..
மகேஸ்வரி தாயே!..
நீ நேசித்த
பாமர சனங்களின் மனங்களில்
பூ மரங்கள் பூப்பூக்கும்..
எம் தேசத்து குடிமக்களின்
ஒவ்வொரு வாசல்களிலும்
மனித நேய மணம் வீசும்..
உன் கனவுகள் வெல்லும்
உன் பெயர் சொல்லும்..
உரத்த காற்று வீச
மறுத்த சிந்தனை பேச
நன்றி - எங்கள் தேசம் இணையம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’