வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 மே, 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்துதலில் மீளக்குடியேறிய மக்களின் வாழ்வினை மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம். - வடமாகாண ஆளுநர் அழைப்பு.

ஐ.நா அமைப்புக்கள் சர்வதேச மற்றும் உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குபற்றுதலோடு யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கான மேம்பாட்டுச் செயற்றிட்டம் தொடர்பான விசேட மாநாடு இன்றையதினம் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)


ஐ.நா அமைப்புக்கள் சர்வதேச மற்றும் உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குபற்றுதலோடு யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கான மேம்பாட்டுச் செயற்றிட்டம் தொடர்பான விசேட மாநாடு இன்றையதினம் இடம்பெற்றது.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற மேற்படி மாநாட்டில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் யாழ். மாவட்டத்தில் செயற்படும் ஐ.நா அமைப்புக்கள் சர்வதேச மற்றும் உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்துமாக ஐம்பத்தொரு அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்குகொண்டனர். அனைத்து அமைப்புக்களினதும் வேலைத்திட்ட அறிக்கைகள் பெறப்பட்ட நிலையிலும் யாழ். மாவட்டத்திலுள்ள பதினைந்து பிரதேச செயலாளர்களின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்ற இம்மாநாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரம் குடியிருப்பு வசதிகள் நீர் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் என்பனவற்றை வழங்குதல் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டது.
இம்மாநாட்டில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஐம்பத்தொரு அமைப்புக்களும் இவ்வருடத்தில் 2221 மில்லியன் ரூபாய்களை வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் அவற்றை ஒருங்கமைத்து ஓர் பொது வேலைத்திட்டத்தின்கீழ் மீளக்குடிமர்ந்த மக்களுக்கு எவ்வாறு பயனள்ளதாக்குவது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. முக்கியமாக மீள்குடியேறியோரில் 7598 குடும்பங்கள் தமக்குரிய நிவாரணங்களை ஒழுங்காக பெற்றுக்கொள்கின்ற போதிலும் உரிய குடியிருப்பு வசதிகள் ஏதுமற்ற நிலையில் வாழ்ந்து வருவது சுட்டிக்காட்டப்பட்டதுடன் அது தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இதன்பிரகாரம் தற்சமயம் யாழ். செயலகத்தினை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் மீளக்குடியேறிய மக்களுக்கான செயற்றிட்டங்களை யாழ். மாவட்டத்திலுள்ள பதினைந்து பிரதேச செயலகங்களுக்குமூடாக விசேட செயலணிகளை அமைப்பதன்மூலம் விரிவுபடுத்தி அதன்மூலம் மீக்குடியேறிய மக்களின் தேவைகளை துரிதமாக செயற்படுத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இச்செயற்றிட்டம் தொடர்பான திட்ட வரைபுகளை யாழ். அரசாங்க அதிபர் திரு கே.கணேஷ் அவர்கள் சமர்ப்பித்து உரையாற்றினார்.
இம்மாநாட்டினை நிறைவு செய்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்துதலில் அனைவரும் இணைந்து மீளக்குடியேறிய மக்களின் வாழ்வினை மேம்படுத்த ஒன்றிணைவோம் எனத்தெரிவித்ததுடன் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம் எமது வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது மீளக்குடியேறிய மக்களினது அனைத்து தேவைகளும் அடுத்த ஆறு மாத காலத்தினுள் முற்றாகப் பூர்த்தி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’