வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம்பெற்றதாக சற்றுமுன் இணையத்தளத்திடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இதன்போது உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து, சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், வவுனியா நகரசபைத் தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததாகவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.
வன்னியில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து வவுனியா நகரிலுள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் இடம்பெற்றதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற மேற்படி நினைவஞ்சலி நிகழ்வானது வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் மன்றத்திலேயே நடத்த ஏற்பாடாகியிருந்தது.
இருப்பினும், பிரதேச பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அதனை வவுனிய நகரசபையில் நடத்த நேர்ந்ததாக சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’