வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 மே, 2010

இந்திய வீரர்களுக்கான நடத்தை விதிகள் அறிமுகம் : பிசிசிஐ

மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அணித்தலைவர் டோனி பொறுப்பு இல்லை , டோனி மீது எவ்வித குற்றச்சாட்டையையும் முன்வைக்க முடியாது .எனவும் இந்திய அணியின் மேலாளர் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிஸ்வால் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை மேற்கிந்தியத் தீவுகளில் மதுபான விடுதியில் ரகளையில் ஈடுபட்டார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள யுவராஜ் சிங், சகீர் கான்,நெஹ்ரா, ரவீந்திர ஜடஜா, ரோஹிட் சர்மா, பியூஷ் சவ்லா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு இன்றைய தினம் மனு அனுப்ப உள்ளதாக பிசிசிஐ செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தை விதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து வருகிறது.
நேற்றைய தினம் இடம்பெற்ற பிசிசிஐ குழுக்கூட்டத்தில் லலித் மோடி விவகாரம், கடந்த 3 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளை ஐஎம்ஜி நிறுவனத்திற்கு, சர்வதேச ஒளிபரப்பு உரிமையை வழங்கியமை, போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர், ஐபிஎல் ஆணையாளர் சிரயூ அமீன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’