வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 மே, 2010

பாதிப்புற்ற சிறுவர்களின் மனோநிலையை மேம்படுத்தத் திட்டம் : மட்டு. அரச ஊடக அதிகாரி

வன்செயல்களால் உளரீதியாகப் பாதிக்கப்பட்ட சிறார்களின் மனோநிலையை மேம்படுத்தவென சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மட்டக்களப்பு மாவட்ட அரச ஊடக அதிகாரி பி.ரீ.அப்துல் லத்தீப் இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய சிறார்களை உளவளப்படுத்தும் சிறுவர் அமைப்புக்களுக்கு உதவ தமது அமைச்சு பல திட்டங்களை அமுல்படுத்த உள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இத்திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்துவது பற்றி ஆராய பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று காலை மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சிறுவர் பூங்காவுக்கு விஜயம் செய்து இவ்வமைப்பின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
கலை கலாசாரங்களூடாக சிறுவர்களை உளவளப்படுத்தல் திட்டங்களையும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கு பார்வையிட்டார்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சகிதம் கிழக்கு மாகாண சபை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் கே.எல்.எம்.பரீத், காத்தான்குடி நகரசபை உப தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’