|
 | |
தொழிற்சங்க நடவடிக்கைகளில் பின்னடைவு |
உலக மயமாக்கல் காரணமாக சர்வதேச நாடுகளைப் போன்று இலங்கையிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக இலங்கை தொழிற்சங்க ஆய்வாளரான பெ. முத்துலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி கடந்த 30 வருடகால போர் மற்றும் இனவாத முறுகல்கள் தொழிலாளர்களை இன ரீதியாக பிரித்து வைத்திருக்கும் நிலையையும் இலங்கையில் ஏற்படுத்தியிருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
 | |
மலையக தொழிலாளர்களின் போராட்டம் |
உள்நாட்டுப் போரைக் காரணம் காட்டி அரசாங்கத்துடன் இருக்கின்ற முன்னணி இடதுசாரி தொழிற்சங்கங்கள் சில தமது வர்க்கப் போராட்டங்களை பின்போட்டுவந்த நிலைமையையும் கடந்த தசாப்தங்களில் இலங்கையில் காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்ததாக இடதுசாரி தொழிற்சங்க தலைவர்கள் அரசாங்க நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்கும் நிலை கடந்த சில வருடங்களாக காணப்படுவதாக கூறும் முத்துலிங்கம் அவர்கள், தமது பதவிகளை தக்க வைத்துக்கொள்வதற்காக அவர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகளும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மீதான நம்பிக்கை குறைவதற்கு காரணமாகிவிட்டது என்றும் கூறுகிறார்.
 | |
பெ. முத்துலிங்கம் |
அதேவேளை, இலங்கையைப் பொறுத்தவரை மலையக பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தேசிய மட்டத்திலான ஏனைய தொழிற்சங்கங்களுடன் ஒப்பிடும் பொழுது செயற்பாட்டளவில் இன்னமும் பலமானவையாகவே இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆயினும், அங்கு தனிப்பட்டவர்களின் நலன்களை நோக்கமாகக் கொண்டு உருவாகும் உதிரி தொழிற்சங்கங்களின் அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் தொழிலாளர் தமது ஒன்றுபட்ட சக்தியை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
|
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’