இலங்கையில் வருகிற ஜூன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இவ்விழாவை துவக்கி வைக்க இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அழைக்கப்பட்டு உள்ளார்.
ஐஸ்வர்யாராய், ஷாருக்கான் போன்றோரும் பங்கேற்பதாக உள்ளது. தமிழ் நடிகர் நடிகைகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்விழாவில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள கூடாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ
டைரக்டர் சீமான் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அமிதாப்பச்சன் வீட்டையும், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ் நடிகர் நடிகைகள் இலங்கை பட விழாவை புறக்கணித்துவிட்டனர். அமிதாப்பச்சனோ ஐஸ்வர்யாராயோ இலங்கைக்கு சென்றால் ராவணன் படத்துக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க சீமான் இயக்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள இப்படம் தமிழிலும் ரிலீசாகிறது. அந்த படத்தை புறக்கணிக்கவும், திரையிட விடாமல் தடுக்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இலங்கை சர்வதேச படவிழாவில் “ராவணன்” படத்தை திரையிடவும் திட்டமிடப்பட்டது. அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’