வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 2 மே, 2010

தற்கொலை செய்துகொள்ள நீதிமன்ற அனுமதி கேட்கும் தம்பதி



ராஜஸ்தானில் கட்டப்பஞ்சாயத்து கொடுமையால் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு ஒரு தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பாரமர் என்ற இடத்தை சேர்ந்தவர் சேத்ராராம். இவரது மனைவி காமா. சேத்ரா ராமுக்கும் காமாவுக்கும் சில ஆண்டுகளக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால் காமாவின் சகோதரர்கள் மற்றும் தாய்மாமா ஆகியோர் காமாவை ரேகாராம் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டனர். அவர்கள் ரேகாராமிடம் ரூ.5 லட்சம் பணம் வாங்கி கொண்டு அதற்கு பிரதிபலனாக காமாவை திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் இந்த திருமணத்தை காமா விரும்பவில்லை. இதனால் ரேகாராம் காமாவை வீட்டில் கட்டி போட்டு வைத்து இருந்தார். அடிக்கடி கற்பழிக்கவும் செய்தார்.
ஆனால் காமா அங்கிருந்து தப்பி வந்து ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட சேத்ரா ராம் வீட்டுக்கு சென்றார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர்.
இதுபற்றி ரேகாராம் ஊர் பஞ்சாயத்தில் புகார் செய்தார். அவர்கள் சேத்ரா ராமும் காமாவும் ரேகா ராமுக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் காமா சேத்ரா ராமை பிரிந்து ரேகா ராமுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டும் இல்லை என்றால் இருவரும் கொல்லப்படுவார்கள் என்று தீர்ப்பு கூறினார்கள்.
இதையடுத்துஇருவரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பால் எங்களால் வாழ முடியவில்லை. எனவே நாங்கள் தற்கொலை செய்ய விரும்புகிறோம். இதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டு உள்ளனர்.
இந்த நூதன வழக்கு நீதிபதி கவுரவ் கோயல் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் இது தொடர்பாக போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’