மேற்கிந்திய தீவுகளின் கயனாவில் ஆரம்பமாகியுள்ள ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் நிய+சிலாந்து அணி இலங்கை அணியை வெற்றிகொண்டுள்ளது.
டீ பிரிவிலுள்ள இவ்விரு அணிகளுக்கும் இடையிலான நேற்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது இத்ன்படி இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில்; 6 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்த்தன 81 ஓட்டங்களைப் பெற்றார்.
136 என்ற வெற்றியிலக்கை நோக்கி ;பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிய+சிலாந்து அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் எடுத்து வெற்றிபெற்றது.
இதில் நிய+சிலாந்து சார்பில் ஜெசி ரய்டர் 42 ஓட்டங்களைப் பெற்றார்;, பந்து வீச்சில் முத்தையா முரளிதரன் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக நிய+சிலாந்து அணியின் வீரர் நந்தன் மக்லம் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை,ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அணி இலகுவாக வெற்றியீட்டியது.
அயர்லாந்து அணியுடன் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் டெரன் சமி 30 ஓட்டங்களைப் பெற்றதுடன், பந்து வீச்சில் ஜீ.டொக்ரெல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
139 என்ற இலக்கை நோக்கி; பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16.4 ஓவர்களில் கசல விக்கெட்களையும் இழந்து 68 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டது.
போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்திய தீவுகள் சார்பில் துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் பிரகாசித்த டெரன் சமி தெரிவு செய்யப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’